Ajith’s Surprise : விஸ்வாசம் திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டய கிளப்பி வரும் நிலையில் தல அஜித் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தல அஜித். இவரது நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் பட்டய கிளப்பி வருகிறது.
கஸ்தூரியை அடுத்து சின்மயியிடம் சிலிமிஷம் செய்த தல ரசிகர்கள்!
குறிப்பாக தமிழ் நாடு, மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற இடங்களில் பெருத்த வசூல் சாதனை படைத்து வருகிறது.
இதனால் தயாரிப்பு நிறுவனம் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அஜித் கொடுத்துள்ள இன்ப அதிர்ச்சி மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், தல அஜித் தயாரிப்பாளருக்கு போன் செய்து நாம் மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என கூறியுள்ளார். அதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளது.
பேட்ட Vs விஸ்வாசம் – லாபம் எது? நஷ்டம் எது? – விநியோகிஸ்தர்கள் அதிரடி பேட்டி!
இந்த படத்தையும் சிவா தான் இயக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தல 61 படமாக தான் இருக்கும் எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.