அஜித் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்.!!
அஜித் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் நேற்று டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.இது மட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குறித்து பேசி உள்ளார். குட் பேட் அக்லி படத்தை பார்த்து அஜித் சார் ரொம்ப ஹாப்பி என்றும், படத்தின் ஆரம்பத்தில் எனக்கு எவ்வளவு சப்போர்ட் கொடுத்தாரோ அதே அளவுக்கு தான் இப்பவும் என்னை ரொம்ப கம்ஃபர்டபுலா பாத்துக்கிட்டாரு என்றும் சொல்லி இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் இயக்குனருக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுங்கள் என்றும் தயாரிப்பாளரிடம் அஜித் சொல்வாராம்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
