தனுஷ் 55 : ஷுட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..!

தனுஷ் 55 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

Dhanush 55 Director Rajkumar Periyasamy gave shooting update..!
Dhanush 55 Director Rajkumar Periyasamy gave shooting update..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்னும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தனுஷ் 55 படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் கொடுத்துள்ளார்.

அதாவது தனுஷ் 55 படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் நம் அன்றாட வாழ்க்கைக்குள்ளே இருக்கக்கூடிய பலரைப் பற்றிய கதையாக இந்த திரைப்படம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Dhanush 55 Director Rajkumar Periyasamy gave shooting update..!
Dhanush 55 Director Rajkumar Periyasamy gave shooting update..!