மீண்டும் அஜித் சாருடன் இணைவதில் ரொம்ப சந்தோஷம்: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்..

‘தல’ அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக ஆதிக் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார். விழாவில் இருந்து கிளம்பும்போது தெரிவிக்கையில்,
அடுத்து அஜித் சார் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே சந்தோஷம். ‘குட் பேட் அக்லி’ மாதிரியே அடுத்த படத்தையும் செய்துவிட முடியாது. வித்தியாசமாக பண்ண வேண்டும். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
‘குட் பேட் அக்லி’ இந்த ஆண்டின் பெரிய வெற்றிப் படம் என்கிறார்கள். அது ரொம்பவே மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதே மாதிரி வேறு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கதையம்சம் உள்ள படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது. மறுபக்கம் கமர்ஷியல் படங்களும் வரவேற்பைப் பெறுவதில் மகிழ்ச்சி’ என்றார்.
