யார் அந்த அதிர்ஷ்டசாலி..? திருமணம் குறித்து மனம் திறந்த தமன்னா.!!

Web Ads

தன்னை திருமணம் செய்து கொள்பவர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் தமன்னா.

actress thamanna about marriage life
actress thamanna about marriage life

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், அயன் ,பையா, கண்டேன் காதலை, வீரம், பாகுபலி, நண்பேண்டா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு பிரிவு ஏற்பட்டது என தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தனக்கு வாழ்க்கைத் துணையாக வரப்போகும் அந்த நபர் குறித்து தமன்னா பேசியுள்ளார்.

அதாவது நான் ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன் என்றும் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நான் அவர்களின் வாழ்க்கைக்கு வந்ததாக ஒருவர் நினைக்க வேண்டும் அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி எனக்கு வாழ்க்கை துணையாக வர வேண்டும் என பேசி உள்ளார்.

நான் அந்த அதிர்ஷ்டசாலியை பார்க்க வேண்டும் என்றும் யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை என்றும் பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress thamanna about marriage life
actress thamanna about marriage life