நடிகை சுஹாசினி இயக்கத்தில் இந்திரா-2 எப்போது?
நீண்ட இடைவெளிக்கு பிறகு, சுஹாசினி இயக்கப்பணியில் ஈடுபட உள்ளாரா? இது பற்றிய தகவல் காண்போம்..
மணிரத்னம்-சுஹாசினி தம்பதியருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். அவரைப் பற்றி தெரிவிக்கையில், ‘எதிர்காலத்தில் இயக்குநராகவோ, நடிகராகவோ வர விரும்பினால் அது அவரின் விருப்பம். அதில் எங்களின் தலையீடு இருக்காது’ என தெரிவித்துள்ளனர்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சுஹாசினி, நடிப்பை தாண்டி இவர் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த ‘இந்திரா’ என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறியவர்.
இந்நிலையில், தற்போது சுஹாசினி தனக்கு இருந்த காசநோய் பற்றி தெரிவித்ததாவது: எனக்கு 6 வயதில் இருந்தே காச நோய் இருந்தது. பின்னர் சிகிச்சை எடுத்த பிறகு சிறு வயதிலேயே அது சரியாகியது. இதோடு அந்த பிரச்சினை முடிந்து விட்டது என நினைத்த நிலையில், எனக்கு 36 வயது இருக்கும்போது மீண்டும் காச நோயால் பாதிக்கப்பட்டேன்.
இதனால், என்னுடைய எடை அதிகரித்தது. காதும் சரியாக கேட்காமல் போனது. சுமார் 6 மாதங்கள் சிகிச்சை எடுத்த பின்னர் காச நோயின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்தேன்.
அப்போது, இது பற்றி வெளியே சொன்னால் எனக்கு கௌரவ குறைச்சல் என நினைத்தேன். அதனால் தான் வெளியே சொல்லவில்லை. இப்போது இது பற்றி சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வெளியே சொல்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதற்கு இணையவாசிகள், ‘ இதுவா சமூகத்துக்கு முக்கியம், நாங்கள் எதிர்பார்ப்பது இந்திரா-2 எப்போது?’ என கேட்டு வருகின்றனர். இயக்குனர் மேடம் பதில் சொல்வாரோ.!