நடிகை சோனாக்சி சின்கா பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்சி சின்கா. முதலில் ஆடை வடிவமைப்பாளராக இருந்த இவர் தபாங் என்னும் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே பல விருதுகளை குவித்த இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இடம் பிடித்திருக்கிறார்.

அதன் பிறகு தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான இவர் தற்போது மீண்டும் பாலிவுட் திரை உலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் சோனாக்ஷி அந்த வகையில் ஆரஞ்சு நிற உடையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.