நடிகை சிம்ரனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Actress Simran in Latest Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனப் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விக்ரமுக்கு ஜோடியாக மகான் படத்திலும் நடித்தார்.

மேலும் தற்போது பிரசாந்த்துடன் இணைந்து அந்தகன் படத்தில் நடித்துள்ளார். அதேபோல் மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மீண்டும் நாயகியாக அவதாரம் எடுத்து கலக்கி வரும் சிம்ரன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்திய பேட்டியில் பங்கேற்றபோது அஞ்சனா ரங்கன் சிம்ரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

படங்களை எல்லாம் பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலையும் எப்படி இவ்வளவு அழகாக இருக்க முடிகிறது என ஆச்சர்யத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.