‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் பிரபல நடிகை..
விஜய்யின் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ் பார்ப்போம்..
விஜய்யின் கடைசிப்படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட நடந்து வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் ‘தாண்டிக்குடி’ பகுதியிலும் எச்.வினோத் படமாக்கினார். விஜய்யும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இதற்கிடையே, இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரியின் ரீமேக் என்றும் தொடர்ந்து தகவல் பரவியது. ‘குட் டச்-பேட் டச்’ என்ற ஒரு காட்சிக்காக அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளதாகவும், மற்றபடி ‘ஜனநாயகன்’ மாறுபட்டது எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படம், சட்டப்பேரவைத் தேர்தலை குறி வைத்து, ஜனவரி 9-ந்தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகிறது.
விஜய், காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் என்றும், பெயர் தளபதி வெற்றிக்கொண்டான் என வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெயரை ஆங்கிலத்தில் TVK என்றும் அழைக்கலாம் என்பதால் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசரை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை ரேவதி ‘ஜனநாயகன்’ படத்தில் இணைந்துள்ளதாகவும்விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
