ரஜினியின் ‘கூலி’ பட மேக்கிங் சீன்ஸ் வெளியீடு..
ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் வைரல் நிகழ்வுகள் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
படத்தில், ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் உபேந்திரா, நாகார்ஜுனா, சௌபின் ஜாகிர், அமீர்கான் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் வருகின்றனர். தங்கக்கடத்தலை மையப்படுத்தி, ஆக்சன் ஜானரில் அதிரடியாய் உருவாகியுள்ளது ‘கூலி’ படம். முழு படமும் பார்த்த அனிருத் பெருமிதமாய் முதல் விமர்சனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படம் குறித்த எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்களை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், தற்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ள மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் இருப்பது, இயக்குனருடன் பேசுவது, திரைகளில் காட்சிகளைப் பார்ப்பது, மக்களைச் சந்திப்பது என அனைத்தும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்நிகழ்வு இணையவெளியில் வைரலாகி தெறிக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இபடத்தின் ஷுட்டிங் கேரளாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இப்படத்தில் இணைவது தொடர்பாக மொகன்லாலிடம் நெல்சன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெயிலர்-2’ படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்குப்பட இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
