
மீண்டும் கவர்ச்சியில் இறங்கியுள்ளார் நடிகை நமீதா.
தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா என்ற படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் என்ற படத்தில் மூலம் மிகவும் பிரபலமானவர் நமீதா.
இந்த படங்களைத் தொடர்ந்து முழுக்க முழுக்க கவர்ச்சி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். மற்றும் மொழி படங்களிலும் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போனதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வீர் என்பவரை திருமணம் செய்து இரட்டை குழந்தைக்கு அம்மாவானார். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நமீதா மீண்டும் படங்களை நடிப்பதற்காக கவர்ச்சியில் இறங்கி உள்ளார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடையில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க