பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் விஜய் பட நடிகை..

Web Ads

பிரபாஸ், தற்போது ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘பவுஜி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன.

‘தி ராஜா சாப்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்த பண்டிகையில் விஜய்யின் ஜனநாயகம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படங்களும் வெளியாகின்றன.

இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ படப்பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Ad 2

இந்நிலையில், மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் ‘ஸ்பிரிட்’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், அவருக்கு இரண்டாவது கதாநாயகி கதாபாத்திரமா? அல்லது அது ஒரு எதிரி கதாபாத்திரமா? என்பது இன்னும் தெரியவில்லை.

மடோனா செபாஸ்டியன், மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், தமிழில் பல படங்களில் நடித்தார். விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.

actress madonna sebastian to join prabhas in spirit movie
actress madonna sebastian to join prabhas in spirit movie