நடிகை குஷ்பூ மருத்துவமனையில் இருந்து வெளியிட்டு இருக்கும் புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் தற்போதும் ஒரு சில படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கும் பதிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், “தான் சொன்னது போல் ப்ளூ காய்ச்சல் மோசமானது. உடல் வலி மற்றும் உடல் பலவீனமானதால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் ரசிகர்களுக்கு வேண்டுகோளாக உங்களது உடல்நிலை சற்று மாறும்போது அறிகுறிகளை புறக்கணிக்காமல் கவனம் செலுத்துங்கள், குணமடைய நீண்டு தூரம் பயணிக்க வேண்டியது இருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்”. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் குஷ்பு சீக்கிரம் உடல் நலம் பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.