நடிகை இவானா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் இவானா. நாச்சியார் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் அதிக அளவில் பரிச்சயமானார். இப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து இவர் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் எம் எஸ் தோனி அவர்களின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் லெட்ஸ் கெட் மேரிட் (LGM) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது தல தோனி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை இவானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து ‘லக்கி கேர்ள்’ என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.