கணவரை பிரிந்து வாழும் ஹன்சிகா: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்..

Web Ads

நடிகை ஹன்சிகாவும் தொழில் அதிபர் சொஹைல் கதூரியாவும் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்தனர். தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

அதாவது, ஹன்சிகா தன் அம்மா வீட்டில் இருக்கிறார். சொஹைல் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். சில மாதங்களாகவே அவர்கள் ஒன்றாக இல்லை. இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சுருக்கமாக ஹன்சிகா தெரிவிக்கையில், ‘இது உண்மை இல்லை’ என்று மட்டும் சொன்னார்.

முன்னதாக, ஹன்சிகாவின் திருமணம் திருவிழா போன்று நடந்தது. அந்த திருமண வீடியோ டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. படத்திற்கு ட்ரெய்லர் விடுவது போன்று, ஹன்சிகா திருமண வீடியோ ரசிகர்களை கவர்ந்தது.

திருமணம் முடிந்ததும், சொஹைலின் குடும்பத்தாருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார் ஹன்சிகா. அப்பொழுது தான் பிரச்சினை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர், கணவருடன் ஹன்சிகா தனிக்குடித்தனம் சென்றார். புது வீடு வாங்கி குடியேறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோவை ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இந்நிலையில், திருமணமாகி 2 ஆண்டுகளில் ஹன்சிகாவுக்கு பிரிவு ஏற்பட்டிருப்பது, அவரின் ரசிகர்களை வருத்தமடைய செய்திருக்கிறது. ‘எந்த பிரச்சினைக்கும் விவாகரத்து முடிவு இல்லை ஹன்சுமா, பேசித் தீர்க்க பாருங்கள்’ என ரசிகர்கள் பேரன்புடன் தெரிவித்து வருகின்றனர். குட் ஃபேன்ஸ்.!

actress hansika motwani and  sohael khaturiya married life
actress hansika motwani and sohael khaturiya married life