ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்துக்கு செம மவுசு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும்போதே, டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை ரூ. 50 கோடி கொடுத்து வாங்க நிறுவனங்கள் முன் வருகின்றன.
ஏ.ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணி ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படுவதற்கு காரணமாகும்.
சிவகார்த்திகேயன், தற்போது வெவ்வேறு ஜானர் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். டாக்டர், மாவீரன், அயலான், அமரன் என ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு ஜானர்களில் உள்ளது. அதைப்போல, தற்போது அவர் நடித்து வரும் மதராஸி, பராசக்தி படங்களும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ‘மதராஸி’ படத்திற்கு கிலிம்ப்ஸ் வீடியோவும், போஸ்டர்களும் ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் மற்றும் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கினால், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
