இயக்குநர் மீது, நடிகை திவ்யபாரதி குற்றச்சாட்டு..

நடிகை மான்யா ஆனந்த் தெரிவிக்கையில், சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன்.
மேலும், அந்த நபரிடமே, அவருடைய எண்ணை தனுஷ் சார் குழுவினருடன் பகிர்ந்து சரிபார்ப்பேன் எனவும் கூறியிருப்பேன். தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், ‘பேச்சிலர்’, ‘மகாராஜா’, ‘கிங்ஸ்டன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த திவ்யபாரதி, தற்போது தெலுங்கில் ’கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை நரேஷ் குப்பிலி இயக்கி வருகிறார்.
இச்சூழலில், இயக்குநர் நரேஷ் குப்பிலி தன்னை மிக மோசமான வார்த்தையில் குறிப்பிட்டதாக திவ்யபாரதி குற்றம் சாட்டியுள்ளார். நரேஷ் குப்பிலியின் பதிவு தொடர்பான ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திவ்யபாரதி, ‘பெண்களை ‘சிலகா’ அல்லது வேறு எந்த வார்த்தையாலும் அழைப்பது நகைச்சுவை அல்ல.
அது ஆழமாக வேரூன்றிய பெண் வெறுப்பின் பிரதிபலிப்பாகும். இது ஒரு முறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல. இந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலும் இதே முறையைப் பின்பற்றியுள்ளார். பெண்களை தொடர்ந்து அவமதித்தார்’ என குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
