நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Actress Dharsha Gupta recent posts trending:

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடந்து பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து ஒரு சில படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது விதவிதமாக எடுக்கப்படும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் புதிதாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களின் மத்தியில் தீயாக பரவி வருகிறது.