எல்லாம் இருந்தும் ஓர் ஆசை நிறைவேறவில்லை: இன்றைய பிறந்த நாளில் ஐஸ்வர்யா ராய் மனக்குறை..
மனக்குறை என்பது எளியோருக்கு மட்டுமா ஏற்படுகிறது. இதோ.. கோடிக்கணக்கான சொத்திருந்தும் ஓர் தேவதையின் ஆழ்மன ஏக்கத்தை கேளுங்கள்.
ஆம்..1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் 50 கிலோ தாஜ்மஹாலான ஐஸ்வர்யா ராய். இந்த பேரழகு தேவதை இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பலரும் வாழ்த்து தெரிவித்து வருவது வைரலாய் தெறிக்கிறது.
இந்நாளில், ஐஸ்வர்யா ராயின் லட்சியம் ஒன்று இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. எல்லாம் இருந்தும் அதென்ன மனக்குறை என்பது குறித்து பார்ப்போம்.. வாங்க..
மாடலாக தன் கெரியரை துவங்கியவர் ஐஸ்வர்யா ராய். 9-ம் வகுப்பு படித்தபோதே விளம்பர படங்களில் நடிக்கத் துவங்கினார்.
படிப்பில் கெட்டிக்காரியான ஐஸ்வர்யா ராய்க்கு டாக்டராக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அவருக்கு மாடல் ஆக வேண்டும், நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இல்லாமல் இருந்தது.
சொல்லப் போனால் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ளக் கூட விருப்பம் இல்லாமல் இருந்தார். அவர் விரும்பாத அனைத்தும் நடந்து விட்டது.
மாடல் ஆனார், மிஸ் இந்தியா பட்டம் வென்றார், உலக அழகி பட்டம் வென்றார், நடிகையானார். தான் விரும்பிய மருத்துவமோ, ஆர்கிடெக்சரோ படிக்க முடியாமல் போனது.
அழகி பட்டம் வெல்லும் முன்பே ஐஸ்வர்யா ராயை தேடி பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அழகி பட்டம் வென்ற பிறகும் பட வாய்ப்புகள் வந்தது. அப்பொழுதும் நோ சொல்லிவிட்டார். ஆனால் இருவர் படத்தில் நடிக்குமாறு மணிரத்னம் கேட்டபோது ஓகே சொல்லி நடிகையானார்.
நடிக்க வந்த பிறகு, ஒரு நாள் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை, கனவு ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்பட்டது.
அந்த ஆசை இதுவரை நிறைவேறாமலேயே இருக்கிறது. சினிமா பற்றி நிறையவே கற்றுக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
தன் குருவான மணிரத்னத்தின் உதவியுடன் அவர் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க வேண்டும் என்பதே ஐஸ்வர்யா ராய் ரசிகர்களின் விருப்பம் ஆகும்.
விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மகள் ஆராத்யா பிறந்த பிறகு கெரியருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வருகிறார் ஐஸ்வர்யா. ஆராத்யா வளர்ந்துவிட்டதால் ஐஸ்வர்யா ராய் தன் இயக்குநர் கனவை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
ஐஸ்வர்யா ராயைப் பொறுத்தவரையில் அவரது சொத்துமதிப்பு சுமார் ரூபாய் 850 கோடிகளில் இருந்து ரூபாய் 900 கோடிகள் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது.
இந்தியாவிலேயே அதிக சொத்துமதிப்புடைய நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். இவரிடம் மும்பையில் மிகவும் ஆடம்பரமான பங்களா உள்ளது. இது இல்லாமல், பல முன்னணி செய்தி நிறுவனங்கள் தொடங்கி பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிட்டராகவும் இருக்கின்றார்.
அதிசயமே அசந்து போகும் அதிசய அழகி தானே ஐஸ்..!