அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் வாங்கப்போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி.ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்தியில் ஷாருக்கான் வைத்து இவரை இயக்கிய ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது அதனைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கான முதற்கட்ட பணிகளில் அட்லி பிசியாக இருந்து வருகிறார் மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் 175 கோடி சம்பளம் கேட்டது மட்டுமில்லாமல் லாபத்தில் 15 % கேட்டுள்ளாராம்.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
