மருத்துவமனையில் அட்மிட்டாகி டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார் நடிகர் விமல்‌ என புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விமல். தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நடிகர் விமலுக்கு நேற்று திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடிகர் விமல் தற்போது உடல்நிலை தேறி வீடு திரும்பி விட்டார் என தகவல் ஒன்று புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் உண்மையில் இது தற்போதைய புகைப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது. மேலும் நடிகர்கள் விமல் தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும் அவரது தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.