ஏழரைச்சனி புடிக்கிறது ரொம்ப நல்லது: விஜய் சேதுபதி எனர்ஜி ஸ்பீச்
‘சினிமாவுல நான் கஷ்டப்பட்டு வரலை, கத்துக்கிட்டு வந்தேன்’ என்றார் விஜய் சேதுபதி. இது பற்றிய அவரது திரைவாழ்வியல் பார்ப்போம்..
விஜய் சேதுபதி தற்போது ‘ஏஸ்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படமும் உள்ளது. இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் வருகிறார். மற்றும் பாண்டிராஜ் இயக்கத்திலும் கமிட்டாகி உள்ளார் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இன்னும் சில படங்களும் அவர் கைவசம் உள்ளன.
இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘உங்களுக்கு ஏழரை சனி புடிச்சிருக்கு, நீங்க இன்னும் 10 வருஷம் கழிச்சு தான் சினிமாவில் கொடிகட்டி பறக்க முடியும். அதனால வெளிநாட்டுக்கு வேலைக்கு போயிடுங்கனு சொன்னாங்க. அதற்கு நான், ஏழரை சனி புடிச்சா ரொம்ப நல்லதுனு சொன்னேன். ஏன்னா, அவர் கெடுதல் பண்ணல, நம்மள கத்துக்க சொல்றாரு அப்படின்னு தான் நான் எடுத்துப்பேன்.
ஒருவேளை பத்து வருஷம் வெளிநாடுக்கு போய்ட்டு, திரும்ப வந்தா.. என்னை சினிமாவுல உச்சத்துல தூக்கி உட்கார வச்சிருவாங்களா?
எனக்கு வேலை தெரியணும்ல. நான் பாட்டுக்குய் போயிட்டா, வேலையை எவன் எனக்கு கத்துக் கொடுப்பான். இங்க இருந்தா தான், நான் கத்துக்க முடியும். அதனால, ஏழரை சனி பிடிக்கிறது ரொம்ப நல்லது. நான் சினிமாவுக்கு கஷ்டப்பட்டு வரல, கத்துக்கிட்டு வந்தேன்’ என கூறியுள்ளார்.
அவரின் இந்த விளக்கத்தை கேட்ட ரசிகர்கள், இந்த தெளிவு இருந்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம்’ என வைரலாக்கி வருகின்றனர்.