சிம்புவின் சாதனையை முறியடித்தார் தளபதி விஜய்..

தளபதி விஜய்யின் கடைசிப்படமாக ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படம், பொங்கலை முன்னிட்டு 9-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில், வசூலில் மட்டுமல்லாமல் தற்போது சோஷியல் மீடியாவிலும் தன் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கின்றார் விஜய். அதாவது, தமிழ் நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் விஜய். 14 .6 ஃபாலோவர்ஸ் பெற்று இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகர்களில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றவர் என்ற சாதனையை விஜய் படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு சிம்புதான் இந்த சாதனையை வைத்திருந்தார். அவர் 14 .5 ஃபாலோவர்ஸ் பெற்று தமிழ் சினிமாவிலேயே அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகராக இருந்தார். ஆனால், தற்போது சிம்புவின் இந்த சாதனையை முறியடித்து விஜய் முதலிடத்தில் இருக்கின்றார். இதனை விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு, தனது மாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை விஜய் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் மூலம் தென்னிந்திய அளவில் ஒரு வீடியோவின் மூலம் அதிக லைக்ஸை பெற்ற நடிகர் என்ற சாதனையை படைத்தார் விஜய்.
அதைத்தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.இதையடுத்து, விஜய் இன்ஸ்டா பக்கத்தை லியோ படத்தின்போது தான் ஓபன் செய்தார். அதற்கு முன்பு ட்விட்டரில் மட்டும் தான் விஜய் இருந்தார்.
அவர் இன்ஸ்டாகிராமில்அடியெடுத்து வைத்ததில் இருந்து பல பல சாதனைகளை முறியடித்து வருகின்றார். ஜனநாயகன் படமும் ரிலீஸானால் ஃபாலோவர்ஸ் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
