நடிகர் சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக பிரபல பாலிவுட் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் தற்போது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் சூர்யா குறித்து பிரபல பாலிவுட் இயக்குனர் அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது, இந்திய திரை உலகில் தொடர்ந்து இதிகாசங்களை மையமாகக் கொண்டு படங்களை உருவாக்குவதில் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா சமீபத்திய பேட்டியில் சூரியபுத்திர மஹாவீர் கர்ணா என்ற படத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிப்பார் என்றும் தற்போது அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் மும்பரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவல் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.