நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் படப்பிடிப்பு பணிகள் ஒரே இடத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இதில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நிறுவனம் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெவ்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதே இடத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் ராஜ் முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.