Web Ads

நடிகர் ஸ்ரீ எழுதிய ‘மே ஐ கம் இன்’ நாவல்: நெட்டிசன்ஸ் வாழ்த்து

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’, மிஷ்கின் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ.

இவர், முன்பு இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது? என வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

ஸ்ரீ நடித்த படங்களுக்கு அவருக்கு சம்பளம் தரப்படாததே அவருடைய இந்த நிலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஸ்ரீயின் நண்பரும், இயக்குனருமான லோகேஷ் கனகராஜ், ஸ்ரீ-க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையை தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கடந்த சில நாட்களாக ஸ்ரீ குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில்,

தான் ஒரு புதிய நாவல் எழுதியுள்ளதாகவும், ‘மே ஐ கம் இன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த நாவலை அமேசான் கிண்டில் தளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மிக மோசமான நிலையில் இருந்த அவர், தற்போது பழையபடி மீண்டு வந்திருப்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.