YouTube video

Actor Sivakarthikeyan‘s Last 10 Movies Collection Full Report

Thuppakki Villain About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்காக காத்திருக்கிறது.தளபதி விஜயை பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியவர் என்றால் அனைவரும் முருகதாஸை தான் கை காட்டுவார்கள்.

இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் இன்று வரை பலரும் கொண்டாடும் படமாக இருந்து வருகிறது.இந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக வித்யூ ஜமால் நடித்திருந்தார். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார்.துப்பாக்கி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம், நான் எதிர்பார்த்த அனைத்தும் எனக்கு கிடைத்தது.

இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டிக்காக தளபதி விஜய் வீட்டிற்கு சென்ற போது அவர் என்னை கட்டி அணைத்து உன்னை நினைச்சா பெருமையா இருக்கு என கூறினார்.தளபதி விஜய்க்கு ஆக்சன் என்றால் மிகவும் பிடிக்கும். தமிழில் பிட்டான நடிகர்களில் விஜய்யும் ஒருவர். நல்ல மனிதர் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.