குடும்பம் மற்றும் சினிமாவை சமாளிப்பது எப்படி? சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..!

குடும்பம் மற்றும் சினிமாவை சமாளிப்பது எப்படி என பேசி உள்ளார் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தின் மதராசி என்ற படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இரண்டு படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் நிகழ்ந்த பேட்டி ஒன்றில் குடும்பம் மற்றும் சினிமாவை சமாளிப்பது எப்படி என பேசி உள்ளார்.
அதாவது எனக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றன அவர்களுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார் ஆனால் என் மனைவி தான் மூன்று குழந்தைகளையும் முழுமையாக கவனித்துக் கொள்வார் என் மனைவிக்கு தான் உண்மையான வலி தெரியும். நான் ஒரு கண்டிப்பான தந்தை எல்லாம் கிடையாது படப்பிடிப்பு தளங்களில் பயங்கரமான அழுத்தம் ஏற்பட்டு வீட்டிற்கு வரும்போது குழந்தைகள் தான் அழுத்தத்தை குறைத்து மகிழ்விக்க செய்வார்கள் என்று கூறியிருக்கிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
