STR 49 : தமிழ் புத்தாண்டு வாழ்த்துடன் அப்டேட் கொடுத்த சிம்பு..வைரலாகும் பதிவு..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துடன் எஸ்.டி.ஆர் 49 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் சிம்பு.

actor simbu update for str 49 movie
actor simbu update for str 49 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எஸ்.டி.ஆர் 49 படம் குறித்த அப்டேட் ஒன்றும் கொடுத்துள்ளார். அதில் இசை மற்றும் புதிய சக்தியுடன் இந்த புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன் என்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அவர்களை எஸ்.டி.ஆர் 49 படத்திற்கு வரவேற்கிறோம் என்று பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.