சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் வில்லன் உபேந்திராவா? கிச்சா சுதீப்பா?

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படம் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் உருவாகத் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், வடசென்னை பற்றிய வேறொரு புதிய கதைக்களத்தில் தற்போது சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டு படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக வடசென்னையை அரங்குகளாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஆனால், வில்லன் யார் என்பது முடிவாகாமல் உள்ளது. இதனிடையே, இதில் வில்லனாக நடிக்க உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கிச்சா சுதீப் நடித்த ‘மேக்ஸ்’ திரைப்படம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரில் யாரேனும் ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாவார்கள் என கூறப்படுகிறது.
அக்டோபர் 16-ந்தேதி அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு, ‘அரசன்’ படத்தின் அறிமுக ப்ரோமோ வெளியாகவுள்ளது. அதில் சிம்புவின் லுக் மற்றும் கதைக்களம் உள்ளிட்டவை தெரியவரும். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
