Actor Radharavi Joined The ADMK : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News | Radha ravi

Actor Radharavi Joined The ADMK  :

Actor Radharavi Joined The ADMK  :  சென்னை : நடிகர் ராதாரவி முதலவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று காலை அதிமுகவில் இணைந்தார்.

மேலும் அதை தொடர்ந்து இன்று நடைபெற்ற, அதிமுக கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்த நடிகர் ராதாரவி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சென்னை காவல்துறையை கண்டித்து டாக்ஸி ஓட்டுனர்கள் போராட்டம்!

மேலும் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் அண்மையில் ராதாரவி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கிய கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இந்த கூட்டத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

திரையுலக பெண்களை இப்படியா பேசுவது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் ஒன்றரை மணி நேரத்தில் முடிவடைந்துள்ளது.

இந்த கூட்டத்தில், ‘உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது(!?) குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கட்சி பிரச்சினைகளை பொதுவெளியில் அதிமுக நிர்வாகிகள் பேசக்கூடாது என்றும் கூட்டத்தில் அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை தனித்தனியே கேட்டறிய அதிமுக தலைமை ஏற்பாடு செய்யும் என்று கூட்டத்தில் உறுதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மட்டுமே பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.