Taxi drivers protest
Taxi drivers protest

Taxi drivers protest – சென்னை: சென்னையில் டாக்சி டிரைவர் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, சென்னையில் டாக்ஸி ஓட்டுனர்கள் காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 25-ஆம் தேதி அண்ணாநகர் பாடி மேம்பாலம் அருகே டாக்ஸி டிரைவர் ராஜேஷ் காருடன் சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் அங்கு நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராஜேஷ் மறைமலைநகர் தண்டவாளத்தில் தனது தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தற்கொலைக்கு முன்பாக ராஜேஷ் வாட்ஸ்அப் மூலம் தனது தற்கொலைக்கு போலீசார் தான் காரணம் என்று வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், போலீசாரின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து, போரூரில் டாக்சி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து காவல்துறையினர் ஓட்டுநர்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசி வருவதாக டாக்ஸி டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று, கடந்த ஆண்டு மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மணிகண்டன் இறந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் தற்போது ராஜேஷ் உயிரிழந்துள்ளார்(?) என்பது குறிப்பிடத்தக்கது.