suresh
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இணைந்துள்ளார்.

Actor R.K.Suresh joined with bjp party – பாஜகவிற்கு தமிழகத்தில் பலமான எதிர்ப்பு இருந்தாலும் ஒரு பக்கம் அக்கட்சிக்கு சிலர் ஆதரவு தெரிவித்துதான் வருகின்றனர்.

இந்த வகையில் நடிகரும், பிரபல தமிழ பட தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

suresh

இவர் தர்மதுரை, சலிம், அட்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். மேலும், 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகம் செய்துள்ளார். அதேபோல் இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமனார். அதன்பின் மருது, ஹரஹர மஹாதேவிக்கி, இப்படை வெல்லும், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பில்லா பாண்டி படத்தில் கதாநாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அவருடன் மாநில பொதுச்செயலாளர் தம்பி கருப்பு முருகானந்தம், இராமேஸ்வரம் கோட்ட இணை பொறுப்பாளர் திரு.P.M.ராஜேந்திரன் ஆகியோர் இருந்தனர்.

இந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர் – வெளியான அதிரடி அறிவிப்பு.!