ஜி.வி.பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கருக்கு தனுஷ் வாழ்த்து..

71-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘பார்க்கிங்’ படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தேசிய விருது வென்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கிராண்ட் ஃபாதர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி, அதில் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேரனாகவும் நடித்து வருகிறார்.
இப்படத்தை குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூலமாக ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, தனுஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ’71-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ‘வாத்தி’ படத்திற்காக இரண்டாவது தேசிய விருதை வென்றுள்ள எனது சகோதரர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஒரு சிறப்புப் பாராட்டு. இது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், அவரிடமிருந்து இன்னும் சிறந்தவை வரவில்லை என்பது எனக்குத் தெரியும். அவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படங்களுக்காக உற்சாகமாக காத்திருக்கிறேன்.
‘பார்க்கிங்’ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர் சாருக்கு தகுதியான அங்கீகாரம். அவர் ஒரு பெரிய திறமைசாலி. இறுதியில் அவருக்கு உண்மையிலேயே தகுதியான பாராட்டைப் பெற்றதற்கு வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.
