Web Ads

காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமாகியுள்ளார்.

actor Kaundamani's wife passed away

actor Kaundamani’s wife passed away

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கவுண்டமணி. கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிக்கு சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. நகைச்சுவை மட்டும் இல்லாமல் கதாநாயகன், வில்லன், குணச்சத்திர நடிகர் என பல்வேறு வேடங்களில் 450-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார்.

சமீபத்தில் ஒத்த ஓட்டு முத்தையா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் திடீரென உடல் நலக் குறைபாடு காரணமாக கவுண்டமணியின் மனைவி சாந்தி மரணம் அடைந்துள்ளார். இவருக்கு வயது 67. இவரின் இறப்பு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கவுண்டமணியின் மனைவி சாந்திக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

actor Kaundamani's wife passed away

actor Kaundamani’s wife passed away