முடிஞ்சா உன் உசிரையும் நாட்டையும் காப்பாத்திக்கோ: ‘சர்தார்’ கார்த்திக்கு பகிரங்க மிரட்டல்
கார்த்தி நடித்த சர்தார்-2 திரைப்பட டீசர் வெளியானது. இந்த டீசரின் மூலம் சொல்லப்படும் கதைக்களம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இவை பற்றிக் காண்போம்..
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ‘சர்தார்-2 உருவாகியுள்ளது. இப்படத்தில், கார்த்தி உடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இணைந்துள்ளனர். தற்போது, இப்படத்தின் மாஸ் காட்சிகளுடன் கூடிய டீசரை ப்ரோலாக் (Prologue) என்ற பெயரில் படக்குழு வெளியிட்டுள்ளது.
‘இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டு உள்ளது. மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் கார்த்தி நடித்துள்ளார். குறிப்பாக கார்த்திக்கு மேக்அப் பொடுவதற்கே 2 மணிநேரம் தேவைப்பட்டது’ என கூறப்பட்டது.
அதற்கேற்ப, டீசரிலேயே அவர் வாள் சுழற்றும் காட்சிகள் ரசிகர்களை இப்படம் எதிர்பார்க்க வைத்துள்ளது. முன்னதாக, இப்படத்தின் இசைப்பணியில் இருந்து யுவன் விலகியதால், சாம்சி.எஸ் இணைந்துள்ளார். அவரது வொர்க்கில் டீசரில் அமைந்துள்ள ஆர்ஆர் மிரட்டுகிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஹாலிவுட்டின் குவாலிட்டியில் 3 நிமிட டீசர் காட்டப்படுகிறது. அதாவது, முழுமையான ஒரு சீன் மாதிரி எடிட் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில்..
“சர்தார்.. உன் நாட்டை நோக்கி ஒரு பிரளயம் வந்திட்டு இருக்கு, முடிஞ்சா உன் உசிரையும் நாட்டையும் காப்பாத்திக்கோ’ என ஜப்பானியன் ஒருவன் வில்லத்தனமாய் கர்ஜிக்கிறான். அடுத்த ஃப்ரேமில் சைலட்டாக எஸ்.ஜே.சூர்யா சர்வதேச கேங்ஸ்டர் போல சிகரெட் பற்ற வைக்கும் காட்சி தெறிக்கிறது.
இதனையடுத்து வரும் ஃப்ரேமில், கார்த்தி ஜப்பானியனிடம் ‘போர்னு வந்திட்டா.. உசிராவது…’ என அவனை வெறித்துப் பார்த்தவாறு நெருங்குகி வருகிறார்’ பின்னணி இசை தீப்பொறியாய் பறக்கிறது. தற்போது, இந்த டீசர் இணையவெளியில் வைரலாகி வருகிறது.