Pushpa 2

இன்று கமல்ஹாசன் 70-வது பிறந்த நாள்: வைரலாகிறது மோகன்லால் பதிவு

‘இளமை இதோ இதோ..’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப இன்று, 70 வயதானாலும் இளமையாக இருக்கலாம் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.

இன்று அவருக்கு 70-வது அகவை நாள். இணையமெங்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதில், நடிகர் மோகன்லாலின் வைரலாகும் வாழ்த்துப் பதிவு குறித்து பார்ப்போம்..

கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். முன்னதாக, விக்ரம் பட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தார்.

குறிப்பாக, அவரது தயாரிப்பில் அண்மையில் வெளிவந்த அமரன் படம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய் பல்லவி ஹீரோயினாகவும் நடித்திருந்த அந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும், சிம்பு நடிக்கும் 48ஆவது படத்தையும் கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி, நடிகர் மோகன்லால் தெரிவித்த பதிவு திரை ஆர்வலர்களால் பெரிதும் ரீச் ஆகியிருக்கிறது. அதில்,

‘கமல்ஹாசன் போன்று இமிடேட் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். அவர் போன்று இருக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், அது சாத்தியம் இல்லை’ என மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் சொன்ன வீடியோவை, ரசிகர்கள் இன்று வலைதளங்களில் ஷேர் செய்வது வைரலாகி வருகிறது.

உலகநாயகனால், தமிழ்த்திரைக்கு மெகா பெருமையே.!