அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்பட்ட ஜெயலலிதா.. பிரபல அரசியல்வாதி ஓபன் டாக்.!!

அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என ஜெயலலிதா ஆசைப்பட்டுள்ளார்.

A famous politician vaasugi latest speech
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி இருந்த நிலையில், ஒரு ஃபேண் பாய் சம்பவமாக இந்த திரைப்படம் இருந்து. அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்க போவார் என்ற கேள்வி என்ன நிலையில் அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அஜித் தனது கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும் என ஆசை இருந்ததாக பிரபல அரசியல்வாதி வாசுகி பேசியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் அம்மா மருத்துவமனையில் இருந்த போதும் கூட அஜித் தம்பி அரசியலுக்கு வந்திருந்தா இந்நேரம் பொதுச்செயலாளராக இருந்திருப்பார் என்று சொன்னாங்க.இப்போ அஜித் அரசியலில் இருந்தால் அவர் தான் சி.எம் ஆகியிருப்பார் வேறு யாருமே வந்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

A famous politician vaasugi latest speech
