முத்து பட நாயகி வாய்ப்பை மிஸ் பண்ண பிரபல நடிகை.. யார் தெரியுமா?

முத்து படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார் பிரபல நடிகை.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து. இந்தத் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மீனா ,ரகுவரன் ,ராதாரவி, செந்தில், வடிவேலு, சரத் பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.
தற்போது இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது இந்த படத்தில் முதலில் மீனாவிற்கு பதிலாக சுகன்யாவிற்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அந்த நடிகைக்கு இப்படி ஒரு வாய்ப்பு வந்ததே தெரியாதது தான் வருத்தமாக இருக்கிறது.
கே எஸ் ரவிக்குமாரை ஒருமுறை சுகன்யா சந்தித்து பேச போனபோது அவர் பேசாதீர்கள் என்று கூறி இருக்கிறார் ஏன் எனக் கேட்க என் படத்தில் நடிக்க மாட்டீங்க என்று சொல்ல , எந்த படம் என்று கேட்டவுடன் முத்து படம் என்று சொல்ல இது சம்பந்தமாக எனக்கு எந்த ஒரு போனும் வரவில்லை வந்திருந்தால் கண்டிப்பாக நடித்து இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
