முகேன் ராவ் – ப்ரீத்தி அஸ்ராணியின் நிறம் பட ரிலீஸ் அப்டேட்!

முகேன் ராவ் நடிப்பில் மருத்துவத் துறையில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்னேகா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜிதேஷ் சாய் வழங்குகிறார்.
மருத்துவத் துறையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் நிகழும் ஒரு முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு, விறுவிறுப்பான திரைக்கதையுடன் கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். விவேகா மற்றும் பா. விஜய் பாடல்களை எழுதியுள்ளனர். பிரவஷ்தி, ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடல்களைப் பாடியுள்ளனர். சாய் பாரதி மற்றும் சங்கர் நடன இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர். உதய் குமார் ஒலி கலவைப் பணிகளையும், டியூனி ஜான் வடிவமைப்புப் பணிகளையும் கவனித்துள்ளனர்.
ஏற்கெனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் பின்னணியில் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
