ஓம் திரை விமர்சனம்

Web Ads

தனுஷ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா, நஸ்ருதீன் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “ஓம்: ஆபரேஷன் மோல்”

திருப்பதி மற்றும் திருவண்ணாமலை இடையில் இருக்கும் காட்டுப்பகுதியில் நடக்கும் செம்மர கடத்தல். அதை கண்டுபிடிக்க அண்டர் கவர் ஆபீஸராக வருகிறார் திரு என்கிற திரு குமரன், ஏஜெண்ட் டி – 402, உள்ளிட்ட பெயர்கள் கொண்ட பழனி (தனுஷ்). இன்னொரு புறம் இந்த முழு கடத்தலையும் செய்து கொண்டிருக்கிறார் கார்த்திகேயன் (மம்முட்டி). இவர்கள் செய்யும் குற்றங்களை எப்படி காவல்துறையுடன் இணைந்து களை எடுத்தார் திரு குமரன் என்பது மீதி கதை.

காவல்துறை அதிகாரி, அண்டர் கவர் ஆபிஸர் என அதற்கு ஏற்ற மாதிரி தன்னுடைய உடல் அமைப்பையும் இன்னும் கட்டுமஸ்தாக மாற்றி இருக்கிறார் தனுஷ். தனுஷ் நடிப்பு குறித்து வர்ணனை செய்ய இனி வார்த்தைகள் நம்மிடம் இல்லை. ஒரு கமர்சியல் நடிகராக காவல்துறை அதிகாரியாக தனது வேலையை மிக அருமையாக செய்து இருக்கிறார்.

இந்த படம் முழுக்க நடிப்பு ஜாம்பவான்களாக இருக்கும் திரைப்படம் என்பதாலேயே ஒவ்வொருவருக்குமான கேரக்டர் சரிசமமாக பிரித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொருவரும் அவரவர் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். முதிர்ச்சியான நடிப்பில் மம்மூட்டி, இதுவரை இல்லாத புது ஆக்ஷன் கெட்டப்பில் சாய்பல்லவி, வழக்கம் போலவே எமோஷனல் எனக்கு என தானாக எடுத்துக் கொள்கிறார் இந்திரன்ஸ். முக்கியமான ஸ்டைலிஷ் கதாபாத்திரத்தில் நஸ்ருதீன் ஷா. சாந்தமான மனைவி கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலா பார்த்து பார்த்து கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

Web Ad 2

பார்த்துப் பழகிய அண்டர் கவர் ஆபரேஷன், அடுத்தடுத்து வரும் காட்சிகளை கூட ஓரளவு நம்மலால் கணிக்க முடியும். இருந்த போதிலும் அதையும் மீறிய கமர்ஷியல் பேக்கேஜ் மற்றும் எங்கும் தொங்காத திரைக்கதையால் கவனம் பெறுகிறது.

படத்தின் இன்னொரு ஹைலைட் சாய் அபயங்கர் இசை. இதற்கு முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்தில் மிக அற்புதமான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். ஆளாக்களுவா, வீரா பாடல்கள் அருமை. மேலும் சோகப் பாடலும் நிச்சயம் அடுத்து வரும் காலங்களில் பிரபலம் ஆகும். எழிலரசு ஒளிப்பதிவில் திருவண்ணாமலை, திருப்பதி, சென்னை, காட்டுப் பகுதிகள், ஜவ்வாது மலை கிராமம், என அனைத்தையும் வேறு வேறு கலர் டோன்களில் காட்சிப்படுத்தி கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார். கலைவாணன் எடிட்டிங்கில் படம் சற்று நீளம் என்றாலும் எங்கேயும் தொய்வில்லாத திரைக்கதையை செதுக்கியிருக்கிறார்.

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் கதை, அதில் ஓரளவு நம்பகத்தன்மையான திரைக்கதையை எழுதி மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. குறிப்பாக உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காக இந்த படத்திலும் நிறைய உணர்வுபூர்வமான காட்சிகளை பதிவு செய்ததற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் பார்த்து பழகிய அண்டர் கவர் போலீஸ் ஹீரோ கதை என்றாலும் தொய்வில்லாத திரைக்கதை மற்றும் திறமையான நடிகர்களால் சிறந்த கமர்சியல் ஆக்ஷன் படமாக கவனம் பெறுகிறது “ஓம்: ஆபரேஷன் மோல்”.

60%

ஓம் திரை விமர்சனம்

ஆபரேஷன் மோல் : தனுஷின் அதிரடி... மம்முட்டியின் ஆளுமை!

  • Rating