தனுஷின் ‘D56’ படத்திலிருந்து ருக்மிணி வசந்த் விலகல்? சாரா அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை!

‘லப்பர் பந்து’ புகழ் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கவுள்ள ‘D56’ திரைப்படம் குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரசாந்த் நீல் இணையும் பிரம்மாண்ட தெலுங்குப் படத்தில் கமிட் ஆகியுள்ளார். அந்தப் படத்திற்கு அதிக கால்ஷீட்கள் தேவைப்படுவதால், தனுஷின் ‘D56’ படத்திற்குத் தேதிகள் ஒதுக்குவதில் அவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ருக்மிணி வசந்த் விலகும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகை சாரா அர்ஜுனைத் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க வைக்கப் படக்குழு பரிசீலித்து வருகிறது. ‘சைவம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், தற்போது நாயகியாக தனுஷுடன் இணைந்தால் அது சுவாரசியமான கூட்டணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
