Web Ad 2

சுயநலத்திற்காக தான் ஜெயிலர் 2 படத்தில் நடித்தேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

Web Ads

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி.

actor vijay sethupathi talk about jailer 2 movie
actor vijay sethupathi talk about jailer 2 movie

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ,மிர்னா மேனன்,விஜய் சேதுபதி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதாவது படத்தில் எனக்கு ஒரு நாள் வேலை மட்டுமே ரஜினி சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக இந்த படத்தை ஒரு சுயநலத்திற்காகவே செய்தேன் என கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் ரஜினி சாருக்கு 70 வயதிற்கு மேல் ஆகிறது ஆனாலும் அவருக்கு ஆறு வயது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் அவரது படைப்புகள் தலைமுறைகளை தாண்டி செல்கின்றது என்று கூறியுள்ளார்.

மேலும் நான் போற்றும் சூப்பர் ஸ்டார் இன்னும் என்னை ஆச்சரியப்படுத்துகிறார் நான் அவருடன் நெருக்கமாக பணியாற்றும்போது அவரது முயற்சியையும் பொறுப்புணர்வும் எனக்கு புலப்படுகிறது என்று பாராட்டி பேசியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vijay sethupathi talk about jailer 2 movie
actor vijay sethupathi talk about jailer 2 movie