விஜய் ரசிகர்களுக்கு நியூ யீயர் ட்ரீட்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் 27-ந்தேதி மலேசியாவில் ஆடியோ லான்ச் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ள நிலையில், இதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை சம்பந்தப்பட்ட பாடகர்களை வைத்து பாட வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கான்செர்ட் ஐடியாவுடன் இசை விழா நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, இந்த கான்செர்ட்டில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் விற்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையில் ‘ஜனநாயகன்’ செகன்ட் சிங்கிள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘தளபதி கச்சேரி’ வெளியானது. இப்பாடலை விஜய், அனிருத் ரவிச்சந்தர், தெருக்குரல் அறிவு மூவரும் இணைந்து பாடியிருந்தனர். செம கலர்புல்லாக ரிலீசான இப்பாடலில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோரும் இணைந்து ஆடியிருந்தனர்.
‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் ரிலீஸ் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 2026 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நியூ இயரை விஜய் ரசிகர்கள் ‘ஜனநாயகன்’ டிரெய்லருடன் வரவேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
