ரஜினி, கமல், சுந்தர்.சி இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினி இணைந்துள்ளார்.
இதனையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி தனது 173-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கவுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குறிப்பாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால், பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஜினி நடிக்கும் இந்த படத்தின் அறிவிப்பிற்கான வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ‘காற்றும் மழையும் நதியும் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்’ என்ற வாசகமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இச்சூழலில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வரும் ரஜினி வரும் 20-ந்தேதி முதல் நடைபெறும் 56-வது இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார். நிறைவு நிகழ்ச்சியில் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயண நிறைவுக்காக கவுரவிக்கப்படுகிறார்.
