முத்துவை விஜயா வெறுக்க காரணம் என்ன? அனைவரும் எதிர்பார்த்த ஃப்ளாஷ்பேக். வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

Web Ads

முத்துவை விஜயா வெறுப்பதற்கான காரணம் என்ன என தெரியவந்துள்ளது.

siragadikka asai serial promo update

siragadikka asai serial promo update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் தற்போது க்ரிஷ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக மட்டுமே அஜய் உடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அவர் கிரிஷுக்கு ஒரு டெஸ்ட் வைப்பதாக சொல்லி இருக்கிறார். அவர் என்ன டெஸ்ட் வைக்கப் போகிறார்? கிறிஸ் என்ன பண்ணப் போகிறான்?இதிலிருந்து முத்துமீனா கிருஷ் எப்படி காப்பாற்றப் போகிறார்கள்? என்று பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் என்னோட நிலைமை கிரிஷுக்கு வந்துடக்கூடாது என்று முத்து வருத்தப்பட்டு பேச அப்படி உங்களுக்கு சின்ன வயசுல என்னதான் நடந்தது என்று மீனா முத்துவிடம் கேட்க அவர் ஃப்ளாஷ் பேக் சொல்லுவது போல ப்ரோமோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பிளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாகிறது அதாவது விஜயா ஒரு ஜோசியரிடம் சென்று பார்க்கும் போது அவர் உங்களது இரண்டாவது மகனால் உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கு என்று சொன்னவுடன் அவரை விஜயா தனது மாமியார் வீட்டிலேயே விட்டு சென்று விடுகிறார் இதனால் முத்து அம்மாவைப் பிரிந்து ஏக்கத்தில் இருக்கிறார்.

இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்று இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.