விக்ரம் பிரபு-அனுஷ்கா நடித்த ‘காட்டி’ திரைப்படம் குறித்து இயக்குநர் அப்டேட்ஸ்..

Web Ads

விக்ரம் பிரபு, அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டி’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் கிருஷ் பேசியதாவது;

‘சில கதைகள் இயல்பாகவே வலுவான உணர்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டு இருக்கும். காட்டியும் அப்படிப்பட்ட ஒரு கதை. ஒடிசா மாநில கிழக்கு தொடர்ச்சி மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பு, வலுவான உணர்ச்சிகள், துணிச்சலான பாத்திரங்கள், உன்னதமான கருத்துக்கள், இவை அனைத்தும் இக்கதையை உருவாக்க உத்வேகம் அளித்தன.

Web Ad 2

அனுஷ்கா ஷெட்டி பட விளம்பரங்களில் பங்கேற்காதது அவரது சொந்த விருப்பம். காட்டி படத்திற்கு அனுஷ்காவின் விளம்பரம் தேவையில்லை. அவரது நடிப்பு இருந்தால் போதும். ‘சீலாவதி’ வேடத்தில் அனுஷ்கா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காட்டி நிச்சயம் வணிகரீதியாக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பவன் கல்யாண் நடிக்கும் ‘ஹரி ஹரா வீர மல்லு’ படத்திலிருந்து விலகியதற்கான காரணங்களை கிருஷ் விளக்கினார். ‘பவன் கல்யாண் எனக்கு மிகவும் பிடித்தவர். நான் அவரை மிகவும் ரசிக்கிறேன். ஏ.எம்.ரத்னம் தயாரித்த படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர்களுடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. கோவிட்-19 சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அந்த படத்திலிருந்து விலக வேண்டியதாயிற்று’ என்று இயக்குநர் கிருஷ் தெரிவித்தார்.

ghaati movie promotion krish jagarlamudi talk about anushka
ghaati movie promotion krish jagarlamudi talk about anushka