விஜய் சாரை மிஸ் பண்றோம்: அனிருத் ஃபீல்..

Web Ads

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அரசியல் பேசும் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் இசையமைத்துள்ள அனிருத், ‘இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் அறிவித்துள்ளதால் அவரை படங்களில் இருந்து மிஸ் பண்ண உள்ளதாக அனிருத் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில்,

லியோ’ படத்தின் ட்ராக்குகளை தனித்தனியாக வெளியிட்டு விட்டோம். அதனால் தான் மொத்தமாக OST ஆக வெளியிடவில்லை. அனைத்தையும் சேர்த்து விரைவில் வெளியிட்டு விடலாம். ’ஜனநாயகன்’ படத்தின் இசை அருமையாக வந்திருக்கிறது. ‘மதராஸி’ வெளியானவுடன் முழுமையாக அப்படத்தில் தான் கவனம் செலுத்தவுள்ளேன்.

விஜய் சாருடன் பணிபுரிந்த படங்களின் பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பாடல்களைத் தாண்டி அதனை விஜய் சார் திரையில் கொண்டு வரும்போது, அதற்கு பெரிய மதிப்பு இருக்கும். விஜய் சாரை படங்களில் இருந்து மிஸ் பண்ணவுள்ளோம்’ என ஃபீலிங்ஸாய் பேசியுள்ளார் அனி.

we miss vijay movies anirudh shares
we miss vijay movies anirudh shares