நெகட்டிவ் ரிவ்யூஸ் மீறி ‘கூலி’ பட வெற்றிக்கு ஒரே காரணம்: தயாரிப்பாளர் தனஞ்சயன் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கும் நிலையில், பலரும் பல கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்,
ஒரு சிலர் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்கின்றனர். மேலும் ஒரு சிலர் வசூல் ரீதியாக இப்படம் ஒரு வெற்றிப்படம் என்கின்றனர். இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவிக்கையில்,
‘ரஜினிக்காகவும் அவரின் மனதிற்காகவும் தான் ‘கூலி’ இப்படி ஒரு வெற்றியை அடைந்துவிட்டது. ரஜினி போன்ற ஒரு மனிதரை யாராலும் வெறுக்க முடியாது. அவரிடம் பழகியவர்கள் கண்டிப்பாக அவரை வெறுக்கவே மாட்டார்கள். அப்படி ஒரு தங்கமான மனிதர் தான் ரஜினி.
ஒருமுறை கூட தன்னை ஒரு பெரிய ஆளாக அவர் காட்டிக்கொண்டதே இல்லை. தன்னைப் பற்றி யாரிடமும் இதுவரை பெருமையாக பேசியதே இல்லை. அதனால்தான், அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. மேலும், இது ரஜினிக்கு திரையுலகில் ஐம்பதாவது ஆண்டு. இந்த ஐம்பதாவது ஆண்டை மிக சிறப்பாக கொண்டாடலாம் என நான் உட்பட சிலர் கேட்டிருந்தோம். ஆனால், ரஜினி அந்த கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை.
மற்ற வருடங்களை போல, இந்த வருடத்தையும் சாதாரணமான கடந்துகொண்டு சென்று விடலாம். இதற்காக, எனக்கு பாராட்டு விழா நடத்தி என்னைப் பாராட்ட வேண்டாம். எனக்கு நடிப்பது பிடித்திருக்கின்றது அதனால் நான் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கின்றேன். இதை பெரிதாக யாரும் கொண்டாட வேண்டாம். அதில் எனக்கு விருப்பமில்லை’ என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
பலமுறை ஐம்பதாவது வருட கொண்டாட்டத்தை பற்றிக் கேட்டபோதும் ரஜினி இதே பதிலை தான் கூறினார். இப்படி ஒரு மனசு உள்ள ரஜினி சாருக்கு வெற்றிகள் ஆட்டோமேட்டிக்காக தேடி வருகின்றது. இதுவே ‘கூலி’ படத்தில் வேறு ஒரு ஹீரோ நடித்து இந்தளவிற்கு கடுமையான விமர்சனங்களை படம் பெற்றிருந்தால், இப்படி ஒரு வெற்றியை ‘கூலி’ படம் அடைந்திருக்குமா? என்பது தெரியவில்லை. நெகட்டிவ் ரிவ்யூஸ் மீறி, படம் ஐநூறு கோடி வசூல் செய்து, வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றது என்றால், அதற்கு ரஜினி சார் தான் காரணம்’ என்றார் தனஞ்சயன்.
