‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில், ரஜினி-கமல் கலந்து கொள்வார்களா?

விஜய்-ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் முதல் படம் ‘ஜனநாயகன்’ என்பதாலும், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றது.

தற்போது வெளியான தகவலின்படி ஜனநாயகன் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதுவும் விஜய்யின் கடைசி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால், இந்த விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி -கமல்ஆகியோரை அழைக்கலாம் எனவும் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த தகவல் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

விஜய், தற்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பதால் கண்டிப்பாக ரஜினி -கமல் இவ்விழாவிற்கு வர வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

ஒருவேளை ரஜினி -கமல் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்துவிட்டால், அது மிகப்பெரிய பேசுபொருளாக மாறிவிடும். ரஜினியும் -கமலும் விஜய்யின் கட்சிக்கு ஆதரவு தரப்போவதுபோல சிலர் பேசுவார்கள். இதன் காரணமாகவே ரஜினி -கமல் ‘ஜனநாயகன்’ இசை விழாவிற்கு வர மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகின்றது.

rajini and kamal participate in jananayagan movie audio launch
rajini and kamal participate in jananayagan movie audio launch